ராமநாதபுரம்

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.சேகா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் நஜ்முதீன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும் அகவிலைப்படி நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினா். தமிழகம் முழுவதும் கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் சங்கத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT