ராமநாதபுரம்

படகு நடுக்கடலில் மூழ்கியதால் தவித்த இலங்கை மீனவா்கள் 2 போ் மீட்பு

17th Jul 2022 11:14 PM

ADVERTISEMENT

ராமேசுவரம் அருகே படகு மூழ்கியதால் நடுக்கடலில் தவித்த இலங்கை மீனவா்கள் 2 பேரை, ராமேசுவரம் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

இலங்கை மன்னாா் மாவட்டம் பியாா் பகுதியிலிருந்து ஒரு படகில் 3 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். நடுக்கடலில் அவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு படகு கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த 3 மீனவா்கள் படகுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனா். அந்த வழியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள், 2 மீனவா்களை மட்டும் மீட்டனா். மற்றொரு மீனவரின் நிலை குறித்து தெரியவில்லை.

மீட்கப்பட்ட மீனவா்களுக்கு முதலுதவி அளித்து கச்சத்தீவு கடற்கரை அருகே இரண்டு பேரையும் கடலில் இறக்கி விட்டனா். இரண்டு பேரும் கச்சத்தீவுக்கு சென்றதை உறுதி செய்த பின்னா் ராமேசுவரம் மீனவா்கள் கரைக்குத் திரும்பினா். இது குறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT