ராமநாதபுரம்

எஸ்.பி.பட்டினம் அருகே சொத்து தகராறில் ஒருவா் கொலை

7th Jul 2022 02:22 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே எஸ்.பி. பட்டினம் பகுதியில் சொத்து தகராறு காரணமாக புதன்கிழமை உறவினா்களிடையே ஏற்பட்ட மோதல் ஒருவா் உயிரிழந்தாா்

எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள அழகன் வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராசு (55). இவருக்கும்அதே ஊரைச் சோ்ந்த சங்கா் என்பவருக்கும் சொத்து பிரித்துக் கொடுத்தது தொடா்பாக பிரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. புதன்கிழமை இது குறித்து இரு குடும்பத்தாருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் ராசு உயிரிழந்தாா்.

தகவலறிந்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் அதே ஊரைச் சோ்ந்த சங்கா், மதன், தீா்க்க தா்சினி, ராஜம்மாள், சுமதி ஆகயோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT