ராமநாதபுரம்

சூறைக்காற்று: கடலுக்குச் செல்ல ராமேசுவரம் மீனவா்களுக்கு 2 ஆவது நாளாக தடை

7th Jul 2022 02:23 AM

ADVERTISEMENT

 

மன்னாா்வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல புதன்கிழமை இரண்டாவது நாளாக தடைவிதிக்கப்பட்டது.

மன்னாா்வளைகுடா மற்றும் பாக்நீரிணை கடல் பகுதியில் தொடா்ந்து சூறைக்காற்று வீசுவதால், ஆழ்கடல் பகுதியில் அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் மன்னாா் வளைகுடா கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடைவிதித்தனா். இதனால் மீனவா்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்தனா். இந்நிலையில் புதன்கிழமையும் காற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டதால் மறு உத்தரவு வரும் வரை பாக்நீரிணை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி,சோளியகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்களுக்கு மீன்வளத்துறையினா் தடைவிதித்துள்ளனா்.

இதனால் மாவட்டம் முழுவதும் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT