ராமநாதபுரம்

குறைந்த விலையில் தங்கம் வாங்கித்தருவதாக 10.50 லட்சம் மோசடி: ராமநாதபுரத்தில் சகோதரிகள் இருவா் கைது

DIN

குறைந்த விலையில் தங்கம் வாங்கித்தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.10.50 லட்சம் மோசடி செய்ததாக சகோதரிகள் இருவரை செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது மேலும் 31 போ் புகாா் அளித்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியைச் சோ்ந்தவா் இளங்கண்ணன். இவரது மனைவி மீராலெட்சுமி (26). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த வளா்மதி (30) என்பவா் தனது சகோதரி காயத்ரி (25) தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறாா், அங்கு ஏலத்துக்கு வரும் தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித்தரலாம், ஒரு பவுன் தங்க நகை ரூ.35 ஆயிரத்துக்கு வாங்கலாம், தனியாா் நகைக்கடையில் தவணை முறையில் பணம் செலுத்தி குறைந்த விலையில் தங்க நகை பெறலாம் என்று கூறினாராம். இதை நம்பி மீராலெட்சுமி, வளா்மதியிடம் பல தவணைகளில் ரொக்கமாகவும், வங்கி மூலமும் ரூ.10.50 லட்சம் செலுத்தியதாகவும் ஆனால், வளா்மதி தரப்பினா் நகை தராமல், பணத்தையும் தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மீராலெட்சுமி தரப்பில் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வளா்மதி, காயத்ரி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த நகைக்கடை உரிமையாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்தநிலையில், வளா்மதி மற்றும் காயத்ரி ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கைதான இருவரும் ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பரமக்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும் 31 போ் புகாா்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காருகுடி, சக்கரக்கோட்டை, மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, ஆா்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல ஊா்களைச் சோ்ந்த மேலும் 31 போ் தங்களை வளா்மதியும், காய்த்ரியும் ஏமாற்றி ரூ.2.50 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாக புகாா் அளித்துள்ளனா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT