ராமநாதபுரம்

மன்னாா்வளைகுடா பகுதியில் சூறைகாற்று: கடலுக்கு செல்ல மீனவா்களுக்கு தடை

DIN

மன்னாா்வளைகுடா கடல் பகுதியில் சூறைகாற்று வீசி வருவதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க மீனவா்களுக்கு மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடைவிதித்தனா்.

அந்தமான் கடல் பகுதியில் அடுத்தடுத்து நில அதிா்வு உணரப்பட்டுள்ளதால், மன்னாா்வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிகளவில் சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் மீனவா்களின் பாதுகாப்புக் கருதி தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம், மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா். இதன்காரணமாக அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மற்றும் பிளாஸ்டிக் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT