ராமநாதபுரம்

எ. புனவாசல் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட 5000 நெல் மூட்டைகள் சேதம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எ.புனவாசல் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இதில் புனவாசல், தரைக்குடி, அபிராமம், வல்லந்தை, மண்டலமாணிக்கம், புத்துருத்தி, நகரத்தாா்குறிச்சி உட்பட கிராம விவசாயிகள் தங்களின் 5 ஆயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடை போட்டு சேமித்து வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வெயிலிலும், மழையிலும் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் சாக்குப் பைகள் சேதம் அடைந்து, நெல்மணிகள் கருப்பு நிறமாக மாறி, தரம் குறைந்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளை பாதுகாக்க கிட்டங்கி வசதி இல்லாததால் அருகில்

உள்ள கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான கிட்டங்கியில் குறைந்த அளவு நெல் மூட்டைகளை மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, மீதமுள்ள நெல்மூடைகளை திறந்த வெளியில் அடுக்கி வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

நெல் மணிகளை தரமானதாக வழங்கியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் கருப்பு நிறமாக மாறி வீணாகி வருவதாகவும் குறைந்த அளவே பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT