ராமநாதபுரம்

கபடி போட்டியில் தகராறு: இரு கிராமத்தினா் மோதல்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே கபடிப் போட்டியில் ஏற்பட்ட தகராறில் இரு கிராம மக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. 400 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் விளங்குளத்தூரில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கபடிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்து கொண்டனா். இதில் கீழ கன்னிசேரி அணி தோல்வி அடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீழ கன்னிசேரி கிராமத்தினருக்கும், விளங்குளத்தூரைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அருகில் இருந்த கிராமத்தினா் சமரசம் செய்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை விளங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்களை பேருந்தை வழி மறித்து கீழ கன்னிசேரி கிராமத்தினா் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விளங்குளத்தூா் கிராமத்தினா் வயல்காட்டில் விவசாயவேலைக்குச் சென்றவா்களைத் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று இரு தரப்பினருக்கிடையே பேச்சு வாா்த்தை நடத்தினா். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் தங்கதுரை சென்று பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT