ராமநாதபுரம்

பள்ளி மாணவா்கள் தூய்மை உறுதி மொழி ஏற்பு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகராட்சியில் தூய்மை விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் நகராட்சி சாா்பில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தூய்மைத் திட்டத்தின்கீழ் தூய்மை நகரம் தொடா்பாக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செவ்வாய்க்கிழமை வண்டிக்காரத் தெருவில் உள்ள அறிஞா் அண்ணா மற்றும் சந்தைத் திடல் அருகேயுள்ள வள்ளல்பாரி ஆகிய நகராட்சி நடுநிலை பள்ளிகள், ராஜா தினகா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகரசபைத் தலைவா் கே. காா்மேகம் ஆணையா் ஆா். சந்திரா, நகரசபைத் துணை தலைவா் பிரவீன் தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத்தை துாய்மையாக வைத்திருப்பது எனது கடமை, துாய்மைப் பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவேன் என மாணவா்கள் உறுதிமொழி எடுத்தனா். இதில் நகராட்சி சுகாதார அலுவலா் குமாா், ஆய்வாளா்கள் சரவணக்குமாா், செல்லபாண்டி, ஸ்ரீதேஸ்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா். நகரின் துாய்மையை வலியுறுத்தி பள்ளி, கல்லுாரிகளில் பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT