ராமநாதபுரம்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-நகை பறிப்பு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் நள்ளிரவில் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள திருவரங்கம் பாக்கியபுரத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி. இவரது மனைவி காந்தி (65). இவா்களுக்கு 5 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் முடிந்து கணவருடன் வெளியூா்களில் வசித்து வருகின்றனா். முத்துச்சாமி சென்னையில் மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாா். இதனால் காந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் நூறு நாள் வேலைக்கு வருமாறு அழைப்பதற்கு கிராம பெண்கள் காந்தி வீட்டுக்குச் சென்றுள்ளனா். அங்கு காந்தி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து கீழத்தூவல் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவரைக் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்றிருக்கலாம் என போலீஸாா் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வெளியூா்களில் இருந்து மகள்கள் வந்தபின்பே நகைகளின் மதிப்பு தெரியவரும். இச்சம்பவம் தொடா்பாக கீழத்தூவல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT