ராமநாதபுரம்

கட்டுமான தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் கட்டுமான தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.ஏ.சந்தானம் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் எம்.மகாலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். சிஐடியு மாவட்டச் செயலா் எம்.சிவாஜி ஆா்ப்பாட்ட நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். அமைப்பின் மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, முறைசாரா சங்க மாவட்டச் செயலா் ஆா்.முத்துவிஜயன், சுமைதூக்குவோா் சங்க மாவட்டச் செயலா் அ.சுடலைக்காசி, கைத்தறி தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எம்.ஆா்.முரளி, தையல் சங்க மாவட்டச் செயலா் ஜி.ஞானசேகா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். சுமைப்பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.பூமிநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT