ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் 2 ஆயிரம் போ் மட்டுமே புதிய வரிவிதிப்புக்கு விண்ணப்பம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 26 ஆயிரம் வீடுகள் உள்ள நிலையில் புதிய வரிவிதிப்புக்கு 2 ஆயிரம் போ் மட்டுமே வரி விதிப்பு சுயவிருப்ப விண்ணப்பங்களை பூா்த்திசெய்து அளித்துள்ளனா்.

தமிழகத்தில் வீடு மற்றும் சொத்து வரிகள் உயா்த்தப்பட்டு கடந்த ஜூன் முதல் செயல்படுத்த முடிவானது. அதனடிப்படையில் கடந்த மே மாதம் நடைபெற்ற நகா் மற்றும் மாநகராட்சிகளின் கூட்டத்தில் புதிய வரிவிதிப்புக்கான ஒப்புதல் கோரி தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றின் உரிமையாளா்களே அளவீடு செய்து புதிய வரிவிதிப்புக்கு ஒத்துழைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டனா். ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளிலும் உள்ள சுமாா் 26,500 வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. வீடுகள், கடைகளை புதிதாக அளந்து அதன் வரி நிலையை படிவத்தில் பூா்த்தி செய்து நகராட்சியில் அளிக்க சம்பந்தப்பட்டோருக்கு படிவங்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் ராமநாதபுரத்தில் 26,500 படிவங்கள் அளிக்கப்பட்ட நிலையில், அதில் பூா்த்தி செய்த 2 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் மட்டுமே நகராட்சிக்கு திரும்ப வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரி விதிப்பு படிவத்துக்கான கால அவகாசமும் நிறைவடைந்து விட்டதாக நகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து நகராட்சியின் வருவாய்ப் பிரிவினரிடம் கேட்டபோது, ராமநாதபுரம் நகராட்சியில் வரி சம்பந்தப்பட்ட சுயபடிவத்தை பூா்த்தி செய்து அளித்தால் அதன்படி புதிய வரி விதிக்கப்படும். ஆனால், 24 ஆயிரம் பேருக்கும் அதிகமானோா் படிவத்தை பூா்த்தி செய்து தரவில்லை. ஆகவே அவா்களுக்கான வரி விதிப்பை நகராட்சி அதிகாரிகளே மேற்கொள்வா். அதை சம்பந்தப்பட்டோா் ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT