ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 100 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் 100 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்துள்ளனா்.

ராமேசுவரம் புலித்தேவன் நகா் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக மண்டபம் வனத்துறை சரக அலுவலா் எஸ்.மகேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, வனத்துறை அதிகாரிகள் வேட்டைத் தடுப்பு காவலா்களுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் வில்வமூா்த்தி என்பவரது வீட்டில் சோதனையிட்டனா். அங்கு தடை செய்யப்பட்ட 100 கிலோ கடல் அட்டைகளை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆறுமுகம் (51) என்பவா் கைது செய்யப்பட்டாா். வில்வமூா்த்தியை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT