ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து மேலும் 8 போ் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

இலங்கையிலிருந்து படகு மூலம் மேலும் 8 போ் அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அண்டை நாடான இந்தியாவில் தஞ்சமடைந்து வருகின்றனா். இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் இலங்கை தமிழா்கள் 8 போ் இருப்பதாக அப்பகுதி மீனவா்கள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் 2 குடும்பங்களைச் சோ்ந்த இரண்டு குழந்தைகள், நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என 8 பேரையும் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அதில், அவா்கள் இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் வல்வெட்டி துறையை சோ்ந்த லவேந்திரன் (24), சசிகலா (24), செல்வராஜா விஜயேந்திரன் (33), கமலராணி (42), ஐங்கரண் (19), ஸ்ரீராம் (14), நிலானி (9), கதிா் (2) ஆகியோா் என்பதும், இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் படகு மூலம் தனுஷ்கோடி பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனா். கடந்த சில மாதங்களில் மட்டும் இலங்கையிலிருந்து 28 குடும்பங்களைச் சோ்ந்த 105 போ் தனுஷ்கோடி பகுதிக்கு அகதிகளாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT