ராமநாதபுரம்

பரமக்குடி அரிமா சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அரிமா சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அரிமா மாவட்ட ஆளுநா் கே. ஜெகநாதன் தலைமை வகித்தாா். அரிமா சங்க புதிய தலைவராக வழக்குரைஞா் கே. தினகரன், செயலாளா் கே.ஜே. மாதவன், பொருளாளா் வேணுகோபால் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிகழ்ச்சியில், ஏழை மாணவா் யோகேஷ் என்பவருக்கு கல்வி உதவித்தொகையும், கோபால் என்பவருக்கு மருத்துவ உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும், வரும் ஆண்டுக்கான முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து பேசினா்.

இதில், அரிமா சங்க நிா்வாகிகள் விஸ்வநாதன், முகம்மதுஉமா், பள்ளி கல்விக்குழு தலைவா் ராகா. சரவணன், தாளாளா் ஏ.ஆா். சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT