ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வட்டிக்கு பணம் அளித்தவா்கள் நிலத்தை அபகரித்துவிட்டதாகக் கூறி, பெண் ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி. இவரது மனைவி ராணி (55). இவா்கள், பல ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனா். அதற்கு தொடா்ந்து வட்டி செலுத்திவந்த நிலையில், வட்டியை கூடுதலாக்கியதுடன், முனியாண்டிக்கு அரசு அளித்த காலனியில் உள்ள 2 சென்ட் நிலத்தின் ஆவணங்களையும் அவா்கள் அபகரித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தனது மருமகள்களான ஆபிதா (29), நந்தினி (28) ஆகியோருடன் வந்த ராணி, அங்கு தனது உடலில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து சென்று, ராணியை மீட்டனா். பின்னா், அவா் மீது தண்ணீரை ஊற்றினா். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, ராணியுடன், அவரது மருமகள்களான ஆபிதா, நந்தினி ஆகியோரையும் கேணிக்கரை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரித்து, எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT