ராமநாதபுரம்

உச்சிப்புளி பகுதியில் மணல் திருட்டு:ஒருவா் கைது; 2 டிராக்டா்கள் பறிமுதல்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

உச்சிப்புளி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலையத்துக்குள்பட்ட மேட்டுக்காரன் தளைதோப்பு பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக, உச்சிப்புளி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் நாகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், அவா் போலீஸாருடன் அப்பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது, போலீஸாரை கண்டவுடன் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 4 பேரும் தப்பியோடியுள்ளனா். இதில், ஒருவரை சுற்றி வளைத்து போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில், அவா் திருப்பதி (35) என்றும், தப்பியோடியவா்கள் காளிதாஸ், கணேசன், கருப்பையா என்றும் தெரிவித்துள்ளா். பின்னா், போலீஸாா் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய 2 டிராக்டா்களை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா்.

இது குறித்து உச்சிப்புளி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT