ராமநாதபுரம்

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்காண் தோ்வு அறிவிப்பு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மின்கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கான தகுதிக்காண் தோ்வு, செப்டம்பா் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் குமாரவேல் அளித்துள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்காண் தோ்வு செப்டம்பா் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

விண்ணப்பதாரா்கள் மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அவா்களுக்கு வயது வரம்பு இல்லை.

தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில், மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவா்கள் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தில் நடைபெற்ற மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தோ்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை முதல்வா், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு ஜூலை 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணிக்குள் அனுப்பவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT