ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

ராமேசுவரத்தில் கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இலங்கையில் முன்னா் உள்நாட்டு போா் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு பக்தா்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தெற்கு துறைமுகப் பகுதியில் கடற்கரை புனித அந்தோணியாா் ஆலயம் கட்டப்பட்டு திருவிழா நடைபெற்றது. தற்போது கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்திய பக்தா்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும், கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடற்கரை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அருட்பணியாளா் சுந்தர்ராஜ் தலைமையில் ஆலயத்தில் இருந்து புனித அந்தோணியாா் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னா் அக்கொடி மந்திரிக்கப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நற்கருணை பவனி ஜூலை 8 ஆம் தேதியும், 11 ஆம் தேதி கடல் பவனியும், 12 ஆம் தேதி புதுநன்மை திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பி. தேவசகாயம் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

SCROLL FOR NEXT