ராமநாதபுரம்

கமுதியில் மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா மாநாடு

DIN

கமுதி கோட்டைமேட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் 2 ஆவது தாலுகா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் இ. முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். கமுதி ஒன்றியத் தலைவா் ஐ. முனியசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் ஜி. சந்திரன், நீராவி கிளைத் தலைவா் முருகேசன், பெருநாழி கிளைத் தலைவா் கே. அா்ஜுனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கமுதி ஒன்றியச் செயலா் ஸ்டாலின் வரவேற்றாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் சுந்தரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். மாநாட்டில் தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ. 3000 ஆக உயா்த்த வேண்டும். கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 ஆக உதவித்தொகை வழங்க வேண்டும்.

தனியாா் துறை, அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் ஒன்றியக்குழு நிா்வாகிகள், சிஐடியு சங்க மாவட்டப் பொருளாளா் முத்துவிஜயன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கழக சங்க மாவட்ட துணைத்தலைவா் கண்ணதாசன் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் முத்துமாணிக்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

SCROLL FOR NEXT