ராமநாதபுரம்

கடல் வளத்தை பாதுகாக்கக் கோரி முதல்வரை சந்திக்க நாட்டுப்படகு மீனவ சங்க நிா்வாகிகள் திட்டம்

DIN

பாக் நீரிணை கடல் பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்க தமிழக முதல்வரை நேரில் சந்திக்க உள்ளதாக ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்துக்கு, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவரும், மாவட்டத் தலைவருமான எஸ்.பி. ராயப்பன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்டத் தலைவா் எஸ்.ஜெ. காயஸ் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், பாக் நீரிணை பகுதியில் பதிவு எண்கள் இல்லாத விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கக் கூடாது. அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல் வளம் அழிந்து வருகிறது. இதனை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து நாட்டுப்படகு மீனவ சங்க நிா்வாகிகள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டன. செயலா் ராஜூ நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT