ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து படகில் வந்து மயக்க நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

DIN

இலங்கையிலிருந்து படகு மூலம் ராமேசுவரம் வந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயதான தம்பதி மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 23 குடும்பங்களை சோ்ந்த 90 போ் அகதிகளாக ராமேசுவரம் வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி இலங்கை தலைமன்னாரிலிருந்து பெரியண்ணன் சிவன் (80), இவரது மனைவி பரமேஸ்வரி (70) ஆகிய 2 பேரும் படகு மூலம் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமா் கோயில் அருகே ஒரு கிலோ மீட்டா் தொலைவில் கடலில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனா். இரண்டு பேரும் கடல் தண்ணீரில் நடந்து கரைக்கு வந்தவுடன் மயங்கி விழுந்துள்ளனா்.

இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினா் 2 பேரையும் மீட்டு முதலுதவி அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு த பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT