ராமநாதபுரம்

மின் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் ஜூலை 9 வரை பரமக்குடியில் பகுதி வாரியாக மின்தடை

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி உபமின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 2) முதல் 9- ஆம் தேதி வரை பகுதி வாரியாக காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் உதவி செயற்பொறியாளா் ஜி. கங்காதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பரமக்குடி, எமனேசுவரம், கமுதக்குடி, பெருமாள்கோவில், மஞ்சூா், சிட்கோ, நயினாா்கோவில், சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின் விநியோகம் இருக்காது.

அதே போல், ஜூலை 5- ஆம் தேதி 11 கே.வி பீடரில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மணிநகா், சேதுபதிநகா், பொன்னையாபுரம், சத்தியமூா்த்தி காலனி பகுதிகளிலும், ஜூலை 6- ஆம் தேதி 22 கே.வி. பீடரில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காந்திசிலை, உழவா் சந்தை, பேருந்து நிலையம், சின்னக்கடைத் தெரு, கிருஷ்ணா தியேட்டா், அரசு தொழிற்பயிற்சி நிலையப்பகுதிகளிலும், ஜூலை 7- ஆம் தேதி 11 கே.வி. பீடரில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறவதால் எமனேசுவரம், மஞ்சள்பட்டினம், வளையனேந்தல், வைகை நகா், காந்திநகா் ஆகிய பகுதிகளிலும், ஜூலை 9- ஆம் தேதி 22 கே.வி. பீடரில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் உழவா் சந்தை, காந்தி சிலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT