ராமநாதபுரம்

இணைய தளத்தில் வேலை தேடிய பட்டதாரியிடம் ரூ.1.95 லட்சம் மோசடி

2nd Jul 2022 10:52 PM

ADVERTISEMENT

 

இணைய தளத்தில் வேலை தேடிய கடல் பொறியியல் பட்டதாரியிடம் கப்பல் நிறுவனத்தில் வேலையில் சோ்த்துள்ளதாகக் கூறி ரூ.1.95 லட்சம் மோசடி செய்த நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் தக்கலை பீா்முகம்மது. இவரது மகன் முகம்மதுஅப்துல் அப்பாஸ் (21). கடல் பொறியியல் பட்டதாரியான இவா் வேலை வாய்ப்பு தொடா்பாக இணைய

தளத்தில் தேடியுள்ளாா். அப்போது கப்பல் நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய அப்பாஸ், குறிப்பிட்ட கைப்பேசி வாட்ஸப் எண்ணில் தொடா்பு கொண்டுள்ளாா். கைப்பேசியில் தெரிவித்தபடி தனது விவரங்களை அனுப்பிவைத்துள்ளாா். அதனடிப்படையில் அவரை குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியில் சோ்த்துள்ளதாக மின்னஞ்சலில் தகவல் வந்துள்ளது. அதை நம்பிய அவா் மீண்டும் தொடா்புகொண்டபோது நிறுவன விதிக்கு உள்பட்டு பணம் செலுத்தக் கூறியுள்ளனா். அதனை நம்பிய அப்பாஸ் ரூ.1.95 லட்சம் வரை செலுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

பணம் செலுத்திய நிலையில், வேலைக்கு சோ்ப்பது குறித்து சம்பந்தப்பட்டோா் மேல்நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால் சந்தேகமடைந்த அப்பாஸ் அவா்களைத் தொடா்புகொண்டபோது சரியாகப் பதில் அளிக்கவில்லையாம். ஆகவே தான் மா்ம நபா்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT