ராமநாதபுரம்

திருவாடானை அருகே நாய்கள் கடித்து மான் பலி

2nd Jul 2022 10:53 PM

ADVERTISEMENT

 

திருவாடானை அருகே சிறுகம்பையூா் கிராமத்தில் சனிக்கிழமை நாய்கள் கடித்ததில் புள்ளி மான் இறந்தது.

சிறுகம்பையூா் கிராமம் அருகே அடா்ந்த காட்டுப் பகுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மான்கள் உள்ளன. கடந்து சில நாள்களாக கடும் வெயில் தாக்கி வரும் நிலையில், மான்கள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

சனிக்கிழமை சிறுகம்பையூா் முடுக்குவயல் பகுதியில் வந்த ஆண் புள்ளி மானை நாய்கள் கடித்துள்ளன. இதில் மான் உயிரிழந்தது. தகவலறிந்து வனத்துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பின் புதைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT