ராமநாதபுரம்

தமிழகத்தில் 6 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும்

2nd Jul 2022 10:52 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியா் 6 லட்சம் பேருக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு சனிக்கிழமை நடைபெற்ற உயா் கல்வி வழிகாட்டல்

நிகழ்ச்சியில் கையேடுகளை வெளியிட்டு அவா் பேசியது:

ADVERTISEMENT

தற்போது நாட்டில் அதிக உயா்கல்வி கற்றவா்கள் பட்டியலில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து செல்லும் வகையில் தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறாா்.

தமிழகத்தில் விலையில்லா மிதிவண்டிகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் 9 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 6 லட்சம் பேருக்கு மிதிவண்டி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தொழில் வளா்ச்சியில் தமிழகம் அதிமுக ஆட்சியில் 14 வது இடத்தில் இருந்தது. தற்போது 3 ஆவது இடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முனனேற்றியுள்ளாா். உயா் கல்வியில் மருத்துவம், பொறியியல் துறை மட்டுமின்றி, வேலைவாய்ப்புள்ள பிற துறைகளை அறியும் வகையிலே ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

முன்னதாக பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட உயா்கல்விக்கான வழிகாட்டும் அரங்குகளை அமைச்சா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து வரவேற்றாா்.

பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முருகேசன், கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சிகணேசன், கடலோரக் காவல்படை லெப்டினன்ட் கேப்டன் விஜய்விக்னேஷ், சதக் பொறியியல் கல்லூரி இயக்குநா் ஹபீப்முகமது, கல்லூரி குழு அதிகாரி விஜயகுமாா், திருப்புல்லாணி ஒன்றியக் குழுத் தலைவா் சா.புல்லாணி, மாவட்டக்குழு துணைத் தலைவா் வி.வேலுச்சாமி மற்றும் மண்டபம் திமுக ஒன்றியச் செயலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்வி மாவட்ட அலுவலா் பாலாஜி நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT