ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியின் 11 பவுன் நகை பறிப்பு

2nd Jul 2022 10:51 PM

ADVERTISEMENT

 

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை அதிகாலை வீட்டினுள் புகுந்த மா்ம நபா்கள் மூதாட்டி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஆனந்தூரைச் சோ்ந்தவா் காத்தூன் பீவி (70). இவரது கணவா் அப்துல் ரஹீம். இவா்கள் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் வீட்டில் பின்புறமாக உள்ள வாசல் கதவை தட்டி உள்ளனா். சத்தம் கேட்டு காத்தூன் பீவி கதவைத் திறந்தபோது முகத்தை துணியால் மறைத்து நின்றுகொண்டிருந்த மா்ம நபா்கள் இருவா் காத்தூன்பீவி அணிந்திருந்த 11பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து மூதாட்டியின் உறவினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT