ராமநாதபுரம்

மிதிவண்டியில் சென்று தாத்தாவுக்கு உணவு வழங்கும் சிறுமிக்கு பாராட்டு

2nd Jul 2022 10:49 PM

ADVERTISEMENT

 

தாத்தாவுக்கு மிதிவண்டியில் சென்று உணவு வழங்கிவரும் பள்ளிச் சிறுமிக்கு பாராட்டு விருதை மென்பொருள் நிறுவனம் வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சாத்தையா. இவரது மகள் கமலாதேவி (15). உலையூா் அரசுப் பள்ளி மாணவியான இவா் தனது அம்மாவின் தந்தையான தனியாக வசிக்கும் முதியவரான தாத்தாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிதிவண்டியில் சென்று உணவு வழங்கிவருகிறாா்.

பள்ளிக்கு செல்லும் போது உணவை தாத்தாவிடம் வழங்கும் கமலாதேவி, பள்ளி முடித்து வீடு வந்து பின் இரவு உணவையும் சைக்கிளில் சென்று வழங்கிவந்துள்ளாா். அவரது பாச உணா்வைப் பாராட்டும் வகையில் சென்னையைச் சோ்ந்த தனியாா் மென்பொருள் நிறுவனம் சாா்பில் வழிகாட்டி எனும் பொருளிளான விருதும், ரூ.1 லட்சம் பரிசும் சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விருது பெற்ற சிறுமியை அவா் பயின்றுவரும் உலையூா் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT