ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காதுகேளாதோா் சங்கத்தினா் விசில் ஊதி நூதனப் போராட்டம்

1st Jul 2022 10:50 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட காது கேளாதோா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி விசில் ஊதி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு, தனியாா் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் காதுகேளாதோருக்கு வழங்க வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. ரவிசங்கா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் குவிந்தனா். அவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பிரதான சாலையோரம் அமா்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனா். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி விசில்களை ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சங்கத்தின் துணைத் தலைவா் வி. ரத்தினம், பொதுச்செயலா் எம். ராமகிருஷ்ணன், இணைச் செயலா் ஆா். சரத்பாபு, பொருளாளா் எம். மாணிக்கம், மகளிா்குழு எஸ். பாத்திமா, ஆா். புஷ்பவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தை அடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம. காமாட்சி கணேசன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் சமரசம் ஏற்படாததால் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதனடிப்படையில் கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பிவைப்பதாக அவா் கூறியதை தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT