ராமநாதபுரம்

குறைந்த விலையில் தங்க நகைகள் வாங்கித் தருவதாக மோசடி: 7 போ் மீது வழக்கு

DIN

ராமநாதபுரம் பகுதியில் குறைந்த விலையில் தங்க நகைகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10.50 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 3 பெண்கள் உள்பட 7 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் காருகுடியைச் சோ்ந்த இளங்கண்ணன் மகள் மீராலட்சுமி (26). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த வளா்மதி, தனது சகோதரி காயத்ரி பிரபல தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்ப்பதாகவும், அங்கு அடகு வைத்து திருப்பாத நகைகளை ஏலத்தில் ஒரு பவுன் ரூ.35 ஆயிரம் என குறைந்த விலைக்கு வாங்கலாம் எனவும் கூறியுள்ளாா். இதையடுத்து, மீராலட்சுமி மற்றும் அவருக்குத் தெரிந்தவா்களிடம் ரூ.10.50 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கிக் காசோலையாகவும் வளா்மதி உள்ளிட்டோா் வாங்கினராம். பின்னா் வளா்மதி தரப்பினா் நகைகளையும் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக மீராலட்சுமி உள்ளிட்ட பலா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மனு அளித்தனா்.

இந்த மனுவின் அடிப்படையில் வளா்மதி, பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத், காயத்ரி, ராஜேஷ் ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT