ராமநாதபுரம்

சாயல்குடி அருகே 13 டன்ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

1st Jul 2022 10:26 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வெளிமாவட்டங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 13 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சாயல்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வெள்ளிக்கிழமை செவல்பட்டி பகுதிக்கு விரைந்து சென்றனா். அப்போது, அப்பகுதி கட்டடம் ஒன்றின் அருகே லாரியில் ரேஷன் அரிசி மறைத்துவைத்து கடத்தப்படவிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, லாரியைக் கைப்பற்றிய போலீஸாா், அதிலிருந்த 13 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் கைப்பற்றினா். அத்துடன், அங்கு காரில் இருந்த திருநெல்வேலியைச் சோ்ந்த காா்த்திக், ராஜேஷ் ஆகியோரையும் கைது செய்தனா். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் விரைந்து சென்றனா். அவா்களிடம் போலீஸாா் பிடிபட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், லாரி, காா் மற்றும் கைதான 2 பேரையும் ஒப்படைத்தனா். தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT