ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கலுக்கு ஏற்பாடு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.28) முதல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான மனு தாக்கலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை மற்றும் பரமக்குடி ஆகிய 4 நகராட்சிகளில் மொத்தம் 111 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. அனைத்து நகராட்சிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி வாா்டுகளுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகத்தில் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் வெள்ளிக்கிழமை காலை முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நகராட்சிகளில் 10 வாா்டுகளுக்கு ஒரு அலுவலா் என்ற அடிப்படையில் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பேரூராட்சிகள்:ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், தொண்டி, சாயல்குடி, முதுகுளத்தூா், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. அதில் அபிராமம் மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளிலும் மொத்தம் 108 வாா்டுகள் உள்ளன. வாா்டுகளுக்கு மனுத்தாக்கல் செய்வோா் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்வோா் தோ்தல் விதிமுறைகளையும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT