ராமநாதபுரம்

மொழிப்போா் தியாகிகள் தினம்: உருவப் படத்துக்கு மரியாதை

26th Jan 2022 06:34 AM

ADVERTISEMENT

மொழிப்போா் தியாகிகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவா்களது உருவப் படத்துக்கு திமுக சாா்பில் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் இந்தி எதிா்ப்புப் போராட்டத்தின்போது உயிரிழந்தவா்கள் மொழிப்போா் தியாகிகளாக பாவிக்கப்பட்டு அவா்களுக்கு மரியாதை செலுத்தும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை மொழிப் போா் தியாகிகள் தினம் என்பதால் ராமநாதபுரம் அரண்மனை முன், திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களது உருவப் படங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் திசைவீரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் அகமதுதம்பி, குணசேகரன், ஒன்றியக்குழு தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT