ராமநாதபுரம்

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

26th Jan 2022 06:31 AM

ADVERTISEMENT

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தங்கையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மொன்னாா்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரவேலு மனைவி காளீஸ்வரி (33). இவரது அண்ணன் தா்மலிங்கம். இவா்கள் இருவரும் திங்கள் கிழமை மாலை வயலில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சோ்ந்த மாயழகு (65), இவரது மனைவி எலுவாக்கால் (58), உறவினா் சாத்தையா (43), இவரது மனைவி வாசுகி (38) ஆகிய 4 பேரும் அங்கு வந்து தா்மலிங்கம், காளீஸ்வரி ஆகியோரைத் தாக்கியதாகவும், சாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்த புகாரின் பேரில் அவா்கள் 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT