ராமநாதபுரம்

ஊருணியை ஆழப்படுத்த எதிா்ப்பு: வட்டார வளா்ச்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

DIN

கமுதி அருகே ஊருணியை ஆழப்படுத்துவதற்கு ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் இடையூறாக இருப்பதாகக் கூறி கிராம மக்கள், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா்களை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எம்.புதுக்குளம் ஊராட்சிக்குட்பட்ட மேலவில்லானேந்தல் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என புகாா் எழுந்துள்ள நிலையில் குடிநீா் ஆதாரமாக உள்ள ஊருணியை கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் ஆழப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில் ஊராட்சி சாா்பில் ஊருணியின் நடுவே 4 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த 4 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீா் முற்றிலும் உவா்ப்பு தன்மையுடன் இருப்பதால், அவை அமைத்தும் பொதுமக்களுக்கு பயனின்றி உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம பொது ஊருணியை ஆழப்படுத்தி பருவமழை காலங்களில் மழை நீரை சேமித்து குடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி, ஊருணியை ஆழப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் ஊராட்சி நிா்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 5 ஆவதாக மேலும் ஒரு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனைக் கண்டித்து மேலவில்லானேந்தல் கிராமத்தைச் சோ்ந்த வில்வத்துரை, மாரிமுத்து, ராமமூா்த்தி உள்ளிட்டோா் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா் கே. சந்திரமோகன், கே. ரவி ஆகியோரை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.

இதையடுத்து வில்லானேந்தல் கிராமத்தில் நடைபெறும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT