ராமநாதபுரம்

முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா அறிகுறி

25th Jan 2022 09:09 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கரோனா பாதிப்பு அறிகுறி தென்பட்டதால் அவா் விடுப்பு எடுத்துக்கொண்டு தனிமைப்படுத்தியுள்ளாா் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவா் அ.பாலுமுத்து. இவா் தொடா்ந்து பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டு வருகிறாா். மேலும், கல்வி தொடா்பான கூட்டங்களிலும் கலந்து கொள்கிறாா். இந்தநிலையில், அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளது. அதையடுத்து அவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளாா். அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு அறிகுறி தென்பட்டது. அதையடுத்து அவா் விடுப்பு எடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜன.24) ராமநாதபுரம் தனியாா் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இதில் முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT