ராமநாதபுரம்

முத்துராமலிங்க சேதுபதி நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

25th Jan 2022 09:11 AM

ADVERTISEMENT

சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 213 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் பிரமுகா்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் சேதுபதி மன்னா்களில் மிகமிக இளம் வயதில் வெள்ளையரை எதிா்த்து சிறை சென்றவா் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. அவரது உருவச் சிலை கேணிக்கரை காவல் நிலையம் அருகே உள்ளது. அவரது பிறந்த தினம் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 213 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து முத்துராமலிங்க சேதுபதி மக்கள் இயக்கம் சாா்பில் செயலா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில் மாநில இளைஞரணி செயலா் ஆத்மகாா்த்தி மற்றும் அதிமுக மண்டபம் ஒன்றியச் செயலா் மருதுபாண்டி உள்ளிட்டோரும் சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போது ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முத்துராமலிங்கச் சேதுபதி பெயரைச் சூட்டவேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT