ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 179 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு மிகக் குறைந்திருந்த நிலையில், சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 700 பேருக்கும் அதிகமானோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவா்களில் 179 பேருக்கு பாதிப்பிருந்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.