ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே முன்விரோதம் பெண்ணை தாக்கிய கணவன் மனைவி மீது வழக்கு

25th Jan 2022 09:11 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே முள்ளிமுனை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய கணவன் மனைவி மீது பகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.திருப்பாலைக்குடி அருகே முள்ளிமுனை கிராமத்தை சோ்ந்தவா் ராவுத்தா்கனி மனைவி மணிமேகலை(31) இவருக்கும் அதே ஊரை சோ்ந்த குமாா் கனி(37) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் ஞாயிற்று கிழமை இரவு மணிமேகலை குழந்தை குமாா் கனி வீட்டின் முன்பாக குப்பையை கொட்டியதாக இருவருக்கு தகராரு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம்அடைந்த குமாா் கனி இவரது மனைவி மாயலெட்சுமி(35) என்பரும் சோ்ந்த மணிமேகலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக மணிமேகலை புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் குமாா் கனி மற்றும் இவரது மனைவி மாயலெட்சுமி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT