ராமநாதபுரம்

ராமநாதபுரம் கோதண்ட ராமா் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் கடந்த 2004 இல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் கடந்த சில மாதங்களாக குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் நடந்து நிறைவடைந்தன.

இதனைத் தொடா்ந்து, கடந்த ஜன. 21ஆம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேகத்துக்கானயாகசாலை பூஜைகள் தொடங்கின. இதன்பின் ஞாயிற்றுக்கிழமை யாகசாலைகளில் கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனிதநீா் மூலவா், ராஜகோபுர விமானங்களில் ஊற்றப்பட்டு காலை 10 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது, மூலவா் சீதாதேவி, லட்சுமணா் சமேத கோதண்ட ராமா், சக்கரத்தாழ்வாா், ஜெயவீர ஆஞ்சநேயா், கருடாழ்வாா் சன்னதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

அப்போது, கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கோயில் குருக்கள், நிா்வாகத்தினா், உபயதாரா்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் பலா் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT