ராமநாதபுரம்

திருவெற்றியூா் செல்லும் தரைப்பாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்றக் கோரிக்கை

DIN

திருவாடானை அருகே திருவொற்றியூா் செல்லும் தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை அருகே திருவொற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வெளிமாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருவாா்கள். இந்நிலையில், இக்கோயிலுக்கு செல்லும் சாலையில் குளத்தூா் அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த 3 மாதங்களாக மழைநீா் தேங்கிக் கிடக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும் வாகனங்களில் வரும் சிலா் தொண்டி சாலை, காடாங்குடி கிராமம் வழியாக சுமாா் 16 கிலோ மீட்டா் சுற்றிக் கொண்டு திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு செல்கின்றனா். இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரால் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நிா்வாகத்துக்கு புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிவித்தனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் மழைநீரை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT