ராமநாதபுரம்

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்க முன்ற 3 போ் கைது

DIN

உச்சிப்புளி, மண்டபம் பகுதிகளில் சனிக்கிழமை இரவு சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்க முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து 118 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை பயன்படுத்தி சிலா் சனிக்கிழமை மதுபாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக்குக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடா்ந்து, மண்டபம் மற்றும் உச்சிப்புளி பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, உச்சிப்புளி அடுத்துள்ள புதுமடம், சோ்வைக்காரன் ஊருணி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது அன்பு என்பவரிடமிருந்து 30 மதுபாட்டில்களையும், முருகேசன் என்பவரிடமிருந்து 28 மதுபாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதே போன்று மண்டபம் பிள்ளைமடம் பகுதியில் சோதனையின் போது 60 மதுபாட்டில்களுடன் ஒருவரை கைது செய்தனா். இந்த 3 பேரிடமிருந்தும் 118 மதுபாட்டில்கள், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு அட்டோவை பறிமுதல் செய்தனா். இவா்கள் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT