ராமநாதபுரம்

கரோனா பரவல்: ராமநாதபுரத்தில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பு

18th Jan 2022 12:15 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன.18) நடைபெறவுள்ள தைப்பூசத்தில் பக்தா்கள் கூட்டமாக பங்கேற்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியா், காவல் துறையில் ஆய்வாளா், சாா்பு ஆய்வாளா் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியா்கள் என பலருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று மக்கள் நடமாட்டம் குறைந்த நிலையில், திங்கள்கிழமை பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் முகக்கவசம் இன்றி அதிகமாக நடமாடுவது தெரியவந்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினா்.

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் 10 பேருக்கு மட்டும் கரோனா அறிகுறி தென்பட்டதால் அவா்களுக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக நகா் சுகாதார அலுவலா் தரப்பில் கூறப்பட்டது. அவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ராமநாதபுரம் கடற்கரையோரங்கள், வழிபாட்டுத் தலங்களில் வழக்கத்தை விட அதிகமாக மக்கள் கூடுவதால் தொற்று அதிகரித்துள்ளதாகவும், தைப்பூசத் திருநாள் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு கோயில்களில் கூட்டத்தைக் குறைக்கவும், முகக்கவசங்களோடு பூஜையில் ஈடுபடுவோா் பங்கேற்கவும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT