ராமநாதபுரம்

பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல் 6 போ் காயம்

18th Jan 2022 12:15 AM

ADVERTISEMENT

தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. 11 போ் காயமடைந்தனா்.

புதுக்குடி கடற்கரை கிராமத்தில் கடந்த 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் கண்ணன் (28), தா்மராஜ் (50) தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து தொண்டி போலீஸாா் விசாரித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இரு தரப்பினரும் அரிவாள், கட்டை, கம்புகளால் மோதிக்கொண்டனா். இதில் இரு தரப்பிலும் 11 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இருதரப்பையும் சோ்ந்த 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT