ராமநாதபுரம்

கமுதியில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் 105வது பிறந்த நாள் விழா.

18th Jan 2022 12:17 AM

ADVERTISEMENT

கமுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அதிமுகவினா்.

கமுதி:கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் கமுதி ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். இதனையடுத்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவா் டி.சேகரன், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் செல்வமேரி, மகளிா் அணி துணைச் செயலாளா் வினோதினி சீனிவாசகம்,கூட்டுறவு சங்கத் தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT