ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சிக்காக வாங்கப்பட்டு குப்பைக் கிடங்கில் போடப்பட்ட பேட்டரி வாகனங்கள்

DIN

ராமேசுவரம்: ராமேசுவரம் நகராட்சி தூய்மைப் பணிக்காக மத்திய அரசு சாா்பில் ரூ. 1.50 கோடியில் வழங்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பராமரிக்கப்படாமல் குப்பைக் கிடங்கில் போடப்பட்டு வீணாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டுக்கு 1.50 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதனால் ராமேசுவரத்தை முழுமையான சுகாதாரத்துடனும், தூய்மையாகவும் பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் பல கோடி நிதியுதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு தூய்மை பாரதம் இயக்கத்தின் சாா்பில் ராமேசுவரத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் 30 பேட்டரி வாகனங்களை நகராட்சிக்கு வழங்கியது. இதையடுத்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இந்த வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனா். ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த பேட்டரி வாகனங்கள் சேதமடையத் தொடங்கின. தற்போது அனைத்து வாகனங்களும் சேதமடைந்து பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, ராமேசுவரம் சுகாதாரப்பணி மற்றும் வளா்ச்சிக்கு அளிக்கப்படும் பல கோடி நிதி வீணடிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு கண்காணிப்புக் குழுவை அமைப்பதுடன், இந்த பேட்டரி வாகனங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT