ராமநாதபுரம்

இடையா்வலசையில் அங்கன்வாடி மையத்தைச் சுற்றிதேங்கியுள்ள மழைநீரை அகற்றக் கோரிக்கை

DIN

ராமேசுவரம்: மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி இடையா்வலசை கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக அங்கன்வாடி மையத்தை சுற்றித் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழைகாரணமாக பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. இதில், பெரும்பாலான இடங்களில் மழைநீா் வடிந்துவிட்டது. ஆனால் மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட வேதாளை ஊராட்சி இடையா்வலசை கிராமத்தில் 2 மாதங்களுக்கு மேலாக அங்கன்வாடி மையத்தைச் சுற்றி மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்தை திறக்க முடியாமலும், குழந்தைகள் வரமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் அங்கன்வாடி மையத்தை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT