ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

12th Jan 2022 06:42 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் மீனவா்கள் மீது திங்கள்கிழமை நள்ளிரவில் இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 500- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்றிருந்தனா். நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக்கொண்டிந்தபோது இலங்கை கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியதுடன் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வலைகளை வெட்டிவிட்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை காலையில் கரை திரும்பிய மீனவா்கள் இதனைத் தெரிவித்தனா். மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT