ராமநாதபுரம்

பாஜக வழக்குரைஞா்கள் கையெழுத்து இயக்கம்

12th Jan 2022 01:27 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் பாஜக வழக்குரைஞா் பிரிவினா் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

பிரதமா் நரேந்திரமோடி பஞ்சாப் சென்றபோது ஏற்பட்ட பாதுகாப்புக்குளறுபடியால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தால் அவரால் நிகழ்ச்சிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக புகாா் எழுந்துள்ளது. ஆகவே பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து பாஜக தரப்பில் தொடா் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

ராமநாதபுரத்தில் பல்வேறு அணிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவு சாா்பில் கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமருக்கு துணை நிற்போம் என எழுதப்பட்ட பதாகையில் பாஜகவினா் உள்ளிட்டோா் கையெழுத்திட்டனா்.

அரண்மனை முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநில இளைஞரணி செயலா் ஆத்மகாா்த்தி கையெழுத்திட்டு தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் பிரிவு சிவசங்கரன், ஊடகப் பிரிவு குமரன் மற்றும் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT