ராமநாதபுரம்

பரிசு தொகுப்பில் பொருள்கள் குறைவு: ராமேசுவரத்தில் புகாா்

12th Jan 2022 06:43 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் 15 பொருள்கள் மட்டும் இருந்ததாக வட்டாச்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

தமிழக அரசு பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கி வருகின்றனா். ராமேசுவரம் தாலுகாவிற்கு உள்பட்ட ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் 22 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் 21-க்குப் பதிலாக 15 பொருள்கள் மட்டும் வழக்கப்படுவதாக பெண்கள் ராமேசுவரம் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT